Map Graph

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம்

மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள வானூர்தி நிலையம்

டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம் மகாராட்டிரத்தின் நாக்பூர் நகருக்கு சேவை வழங்கும் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த நிலையம் நாக்பூரின் தென்மேற்கில் 8 கி.மீ. தொலைவில் சோனேகாவ்னில் அமைந்துள்ளது. 1355 ஏக்கர்கள் பரப்பளவு கொண்ட இந்த வானூர்தி நிலையம் 2005இல் இந்திய அரசியலமைப்பை வடித்தச் சிந்தனையாளர் அம்பேத்கர் நினைவாகப் பெயரிடப்பட்டது. நாளுக்கு 4,000 பயணிகளைக் கையாளும் இந்த நிலையம் ஐந்து உள்நாட்டு வான்சேவை நிறுவனங்களாலும் இரண்டு பன்னாட்டு வான்சேவை நிறுவனங்களாலும் பயன்படுத்தப்படுகின்றது. சார்ஜா, தோகா மற்றும் 12 உள்நாட்டுச் சேரிடங்களுக்கு இவை நாக்பூரை இணைக்கின்றன. இங்கு இந்திய வான்படையின் வான்தளமும் அமைந்துள்ளது. பயணிகள் போக்குவரத்து பெரிதும் 700 கி.மீ. தொலைவிலுள்ள மாநிலத் தலைநகர் மும்பைக்கே உள்ளது.

Read article
படிமம்:NagpurAirport.JPGபடிமம்:India_Maharashtra_location_map.svgபடிமம்:India_location_map.svg